சென்னை: 
ந்தமானுக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவிக்கையில்,
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்றும், அந்தமானுக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகிற 9-ந்தேதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்துவரும் பட்சத்தில் 11 மற்றும் 12-தேதிகளில் (வியாழன், வெள்ளி) சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.