ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுடன் இணைப்பில் இருந்தவர்களை என்ஐஏ வேட்டையாடி வருகிறது. ஏற்கனவே கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடக, கேரள மாநிலங்களிலும் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டில், இளைய தலைமுறையினரைன மூலைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பும் பணியில் பலர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, பலரை கண்காணித்து வரும் காவல்துறையினர், அவ்வப்போது சிலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் கான் என்பவர்  ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய  இளைஞர்களுக்கு பணம் ஆசை காட்டி, அவர்களிடம் பேசி,  மூளை சலவை செய்து பயங்கார  அமைப்புகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு பயங்கரவாதிகளை வரழைத்து நாசவேலையில் ஈடுபட விழைந்ததாகவும் குற்றச்சாட்டுக் கள் கூறப்படுகின்றன.  தலைமறைவாக வாழ்ந்து வந்த இம்ரான்கானை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தன நிலையில்,  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இம்ரான் கான் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான்கான் ஓராண்டுகளாக உத்தமபாளையத்தில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது.