வாரணாசி

க்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.    கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் மோடியை எதிர்த்து 41 பேர் போட்டியிட்டனர்.   தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் மற்றும் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஷாலினி யாதவ் ஆகியோர் உள்ளிட்ட 25 பேர் களமிறங்கி உள்ளனர்.

மொத்தம் மோடியை எதிர்த்து 25 பேர் போட்டியிடுகின்ற அனைவருக்கும் மோடி இந்த தொகுதியின் வலுவான வேட்பாளர் என தெரிந்தும் போட்டியில் இறங்கி உள்ளனர்.   இவர்களில் ஆந்திர, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், பீகார், கேரளா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.  ஒவ்வொருவருக்கும் மோடியை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் உள்ளது.

மகாராஷ்டிரவை சேர்ந்த விவசாயியான மனோகர் ஆனந்த் ராவ் பாடில் தேசத்தந்தை காந்தியை போல உடை அணிந்து அத்துடன் அவர் படத்தையும் கழுத்தில் அணிந்துள்ளார்.  அவர்ல்,. “நான் மோடியை தோற்கடிக்க இங்கு வரவில்லை.  விவசாயிகளின் துயரங்களை அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

மறைந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர் முகமது சாகித் மகளான ஹினா சாகித், “நான் பெண்களின் குறைகளை மக்களவையில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறேன்.  நான் மோடியை வெல்ல முடியாது என எனக்கும் தெரியும்.   ஆனால் அவர் வலுவான வேட்பாளர் என்பதால் நான் வீட்டில் அமர்ந்திருக்க விரும்பவில்லை.” என கூறி உள்ளார்.

சத்திஸ்கரை சேர்ந்த மனிஷ் ஸ்ரீவத்சா அனைத்து அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கவும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொள்ளவும் வலியுறுத்த போட்டி இடுகிறார்.    உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த சுனில் குமார் கங்கை சுத்திகரிப்பு குறித்து வலியுறுத்த போட்டி இடுகிறார்.

லக்னோவை சேர்ந்தா சேக் சிரஜ் பசுவை தேசிய மிருகமாக அறிவிக்கவும் பசுவை கொல்வதை தடுக்க தேசிய அளவில் சட்டம் இயற்றவும் வலியுறுத்த  போட்டி இடுகிறார்.     ஆந்திராவை சேர்ந்த மானவ் விஷ்வமானவ் என்பவர் விவசாயிகளின் கடன் தொல்லை குறித்து பிரதமர் அறிய வேண்டும் என்பதற்காக போட்டியிடுகிறார்.

எழுத்தாளர் அமரேஷ் மிஸ்ரா உயர்சாதியினர் கொடுமை அதிகரித்துள்ளதை மோடிக்கு அறிவிக்க போட்டி இடுகிறார்.  இவர்களைத் தவிர விவசாய விஞ்ஞானி ராம் சரன் ராஜ்புத்,  வழக்கறிஞர் பிரேம்நாத் சர்மா, மற்றும் திருபுவன் சர்மா  ஆகியோர் களத்தில் உள்ளனர்