டில்லி

தேசிய ரியல் எஸ்டேட் முன்னேற்றக் குழு ஜி எஸ் டியை 6% ஆக குறைக்கவேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாடெங்கும் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் கடும் பின்னடவைக் கண்டுள்ளது.  கட்டி முடிக்கப்பட்ட பல கட்டிடங்களும் பல நகரங்களில் விற்பனை ஆகாமல் உள்ளன.  தற்போது ஜி எஸ் டி ஆக 12% வரி வசூலிக்கப் படுகிறது.  இது குறித்து தேசிய ரியல் எஸ்டேட் முன்னேற்றக் குழு டில்லியில் ஒரு கூட்டத்தை நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் அங்க குழுவின் தலைவர் ஹஷ்முக் ஆதியா உரையாற்றினார்.  அவர் தனது உரையில், ”தற்போதுள்ள 12% ஜி எஸ் டி வரி விதிப்பால் வாங்குபவர்கள் அதிகம் பணம் செலுத்த வேண்டியதுள்ளதால் இந்தத் துறை மிகவும் பின்னடைந்து வருகிறது.  எனவே இதை 6% ஆக குறைத்து உள்ளீட்டு வரி திரும்ப பெறும் வகையில் மாற்றி அமைக்கப் பட வேண்டும்.  இதன் மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்களுக்கு கிடைக்கும் நலன்களை வாங்குவோருக்கு அளிப்பார்கள்.  அதனால் விலை குறைந்து இந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  இது குறித்து அரசிடம் முறையிட உள்ளோம்” என தெரிவித்தார்.