சென்னை:

டிகர்களை கீழ்த்தரமாக சமூக வலைதளங்களில் விமர்சித்து, அதை  பெரிதாக்கி வருகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்  என்று   இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கடுமையாக சாடி உள்ளார்.

நாட்டிலேயே சமூக வலைதளத்தை அனைத்து வகையான நல்ல தேவைகள் முதல் கெட்ட தகவல்கள் பரப்புவது வரை அனைத்துக்கும் உபயோகப்படுத்துவது தமிழர்கள்தான் என்றால் மிகையொன்றுமில்லை.  இதன் மூலம் நமது நடிகர்களின் ரசிகர்கள் அவ்வப்போது அடித்துக்கொள்வதும் உண்டு. சமீபத்தில்   சமீபத்தில் விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அவர்களின் ரகிகர்கள் டிவிட்டரில், கீழ்த்தரமாக பதிவிட்டு, அதை டிரெண்டிங்காக்கினர். இந்த சம்பவம் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது..

அதைத்தொடர்ந்து, RIPactorVIJAY என்றொரு ஹேஷ்டேக்  டிரெண்டிங் ஆனது.  போட்டி மனப் பான்மையுடனும் பகைமை உணர்வுடன் ட்விட்டரில் இதுபோன்ற செயல்களை அடிக்கடி வெளியாகும் போக்கினை கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  சில நாள்களுக்கு முன்பு விண்கற்களால் நம் பூமி தாக்கப்படாமல் தப்பித்தது. முறையற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கியுள்ளது. நம் நாட்டின் பல இடங்கள் வறட்சியை எதிர்கொண்டுள்ளன. நம்மைத் தொந்தரவு செய்யும் குற்றச் செயல்கள் பேசப்படுகின்றன.

ஆனால் நம் மாநிலத்தின் இளைய தலைமுறை  RIPactorVIJAY என்கிற ஹேஷ்டேகை டிரெண்டிங் செய்கிறார்கள் என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பதிவிட்டதாவது, மனிதகுலம் எதிர்கொள்ளும் பல முக்கியமான பிரச்சினைகள்  உள்ளன, மேலும் எங்கள் இளைஞர்கள் இந்த வகையான குறிச்சொற்களை வளர்ப்பதில் மும்முரமாக உள்ளனர்.  ‘சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிரகத்தைத் தாக்கிய ஒரு சிறுகோள் இருந்தது, ஒழுங்கற்ற பருவமழை வெவ்வேறு நகரங்களைத் தாக்கியது, நம் நாட்டின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் மிகவும் தொந்தரவான கிரிமினல் வழக்குகள் பேசப்படுகின்றன, ஆனால் நமது அருமையான மாநிலத்தின் இளம் தலைமுறை  இந்த # RIPactorVIJAY என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றனர் ….  என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.