தீபாவளியை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7மணி வரை ரேசன் கடைகளை திறக்க உத்தரவு…

Must read

சென்னை: தீபாவளியை முன்னிட்டு காலை 8மணி முதல் இரவு 7மணி வரை ரேசன் கடைகளை திறந்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை விநியோகிக்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு ஐப்பசி 18ம் தேதி நவம்பர் 4 வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,  காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் பொருட்கள் பொதுமக்களுக்கு  விநியோகிக்க அறிவுறுத்தப்படட்டுள்ளது.

மேலும் நியாய விலைக் கடைகளுக்கு தேவையான பொருட்களை முன்நகர்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அறிவுறுத்துவதாகவும், விநியோக பணிகளை கண்காணிக்க வட்ட வழங்கல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article