முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை…

Must read

சென்னை: சொத்து குவிப்பு தொடர்பாக  முன்னாள் அதிமுகஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இன்று  2வது நாளாக  லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு மீறி சொத்துக்களை சேர்த்துள்ளதாக கூறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது  உறவினர்களுக்கு சொந்தமான 23 இடங்களில் கடந்த ஜூலை 22ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை  காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.

இதில், அவரது வீட்டில் இருந்து ரூ.22 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்பு துறை விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று விசாரணைக்கு ஆஜரானவரிடம் சுமார் 8மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.  அவரிடம் இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

More articles

Latest article