சென்னை:
ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதன்படி, ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் என்றும், இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று கட்டுப்பாட்டு விதித்துள்ளது.
நியாய விலைக் கடைகளில், பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும் என்றும், நியாய விலைக் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel