நாளை நடைபெற இருந்த நியாய விலை கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Must read

சென்னை:

மிழகத்தில் நாளை நடைபெற இருந்த நியாயவிலை கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கூட்டுறவு சங்க பதிவாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொடர்ந்து நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

சமீபத்தில், ரேஷன் கடையில் இறக்கப்படும்  பொருட்களை, கடையில் எடை போட்டு வழங்கும் அறிவிப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருநாள்  கடைகளை  மூடி, வேலைநிறுத்தம் செய்யப்படும் என  அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர், ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article