மும்பை:
லகலாவிய அளவில் தொழில் நிறுவனங்களை நடத்தும் இந்திய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.

ரத்தன் டாடா - சைரஸ் மிஸ்திரி
ரத்தன் டாடா – சைரஸ் மிஸ்திரி

ஏற்கெனவே கடந்த 1991-ம் ஆண்டு முதல் தலைவராக பெறுப்பு வகித்த ரத்தன் டாடா 2012-ம் ஆண்டு அப்பொறுப்பில் இருந்து விலகினார். சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் ஆலோசனை கூட்டம் மும்பை நகரில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பி.மிஸ்ட்ரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ரத்தன் டாடா, வேணு ஸ்ரீனிவாசன், அமித் சந்திரா, ரோனென் சென் மற்றும் லார்டு குமார் பட்டாச்சார்யா ஆகியோர் உள்ளிட்ட தேர்வுக்குழு அடுத்த நான்கு மாதத்துக்குள்  புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்.
இன்று நீக்கப்பட்ட சைரஸ் பி.மிஸ்டரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தலைவராக இருந்தார்.