இனி சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் பதுக்க முடியாது

Must read

282088-blackmoney-ravindra-jadhav-rnaமோடியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமே கருப்புபணத்தை மீட்பது. பதிவியேற்றுவுடன் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வண்ணம் இருந்தார். திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மோடியின் ஒரு அறிவிப்பிற்கே இந்தியா கதிகலங்கி போனது. இந்த அறிவிப்பு நல்லதா? கேட்டதா என்ற விவாதம் கூட முடியவில்லை. சுவிட்சர்லாந்து அரசு கறுப்புபணம் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மோடி சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டார். சுவிஸ் ஜனாதிபதி ஜோநாதன் சினைடர் அம்மானை ஜெனீவாவில் சந்தித்து கருப்புப்பணம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் சுவிஸ் அரசு, 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தர சம்மதித்துள்ளது.

More articles

Latest article