மேஷம்

ஆபீஸ்லயோ அல்லது பிசினஸ்லயோ முன்னால ஏற்பட்டிருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். நீங்க செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் தூய சிந்தனைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

குழந்தைங்க ஒங்களை சந்தோஷப்படுத்தப்போறாங்க. கோவில்கள்.. சர்ச்.. மாஸ்க் மாதிரியான… வழிபடும் இடங்களுக்குப் போவீங்க. அந்த இடத்தில் உங்க வாழ்க்கையைத் திசை திருப்பும் நன்மை ஒன்று நடக்கப் போகுது. யாரையேனும் ஒரு நல்லவங்களை சந்திக்கக்கூடும். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். இது வரை சந்திக்காத புதிய முகமாக அவர் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அவர்/அவங்க எதிர்பாலினத்தினராக இருக்க வாய்ப்பு அதிகம் அரசியலில் இருப்பர்கள் இது கனவா நிஜமான்னு கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வைப்பீங்க. குடும்பத்தில் ஹாப்பி ஹாப்பி நிகழ்ச்சிகள் நடைபெறும். விலகிய உறவினர் மறுபடியும் சேர்ந்துப்பாங்க. சருமம் பற்றிய ஆரோக்யத்தில் அதிக கவனத்துடன் இருங்க. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

மிதுனம்

திஸ் வீக்..  உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடிச்சு வெல்வீங்க. எனவே ‘ஹாப்பியா ஆயிடுவீங்கப்பா…  மனசுல இருந்துக்கிட்டிருந்த வீண்கவலைங்க நீங்கும். மத்தவங்க.. எஸ்பெஷலி ஒங்களோட மேலதிகாரிங்க ஒங்ககிட்ட குடுத்த எந்த வேலையையும் பெஸ்ட்டா செய்து முடிப்பீங்க. தொழில் வியாபாரம்.. பிசினஸ் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களோட அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. உத்தியோகத்துல இருக்கறவங்க எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாகியிருந்த நிலை மாறும். குடும்பத்துல உள்ளவங்களோட தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டு, அதில் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைவீங்க. குடும்பத்துல இதமான சூழ்நிலை காணப்படும். ரிலேடிவ்ஸ் வருகையும் அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கடகம்

நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனால் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும். ஸோ வாட்? ஒங்களோட கடின உழைப்புக்கும், முயற்சிக்கும், அலைச்சலுக்கும் ஏற்ற பலன்தான் இருக்கப்போகுதே. பிறகென்ன? அலுவலகத்தில் ஒங்களுக்கு மேலே உள்ள அதிகாரிங்களோட ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். அதில் ஒரு சின்ன இக்கு இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனசில் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. அவ்ளோதானேங்க நமக்கு வேண்டியது.  சூப்பரா ஜமாயுங்க. . திட்டமிட்ட பணவரவுகள் சிறிது தாமதமாக வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடிச்ச இடமாற்றம் வரலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார உயர்வு ஏற்படும். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். இட்ஸ் ஓகே தானே?

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

சிம்மம்

இவ்ளோ நாளா வெளியில சொல்ல முடியாதபடி இருந்துக்கிட்டிருந்த மனக்குறைகள் நீங்கும். பிள்ளைங்களோட கல்வி மற்றும் அவங்களோட எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். மனம் விரும்பியபடி டிராவல் செய்ய நேரிடலாம். கலைத்துறையினருக்கு இன்கம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வளர்ச்சி காண்பீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு விளையாட்டுல ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம். பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத்துறையினர் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். அரசியல்வாதிகள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீங்க.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 24 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கன்னி

ஃப்ரெண்ட்ஸ்னால ஒரு பெரிய நன்மைக்குக் காரணமாய் இருப்பாங்க. மம்மியால் உங்களுக்கும் உங்களால் டாடிக்கும் நன்மைகள் ஏற்படும். ஆக மொத்தத்தில் குடும்ப ஒற்றுமை கூடும். குடும்பத்துல ஏகமாய் சந்தோஷம் வரப்போகுது. இன்னொரு பக்கம் அலுவலகத்தில் பதவு உயர்வு சம்பள உயர்வு பொறுப்பு உயர்வு கவுரவம்னு மகிழ்ச்சி அலை அடிக்கப்போகுது. எது நடந்தாலும் நன்மைக்குத்தான். சும்மா சமாதானத்துக்குச் சொல்றேன்னு நினைக்கறீங்களா? இப்ப இப்படி ஆகிப்போச்சேன்னு நினைக்காதீங்க. இதன் விளைவு பற்றி பிற்காலத்தில் பெரிய அளவில் சந்தோஷப்படப்போறீங்களே. எத்தனை நாளாப் படுத்திக்கிட்டிருந்த பிரச்சனை ஒன்று உங்களைவிட்டு நிரந்தரமாய் டாட்டா சொல்லப்போகுது. வெகு காலத்திற்குப் பிறகு நிம்மதிக்கு ஸ்பெல்லிங் கண்டுபிடிப்பீங்க.. உத்தியோகத்தில் கவனக்குறைவு ஏற்படாதபடி  கேர்ஃபுல்லா இருங்க- தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை விரைவாகச் செய்வீங்க.

துலாம்

சின்ன விஷயங்களுக்குத் தேவையே இல்லாம கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க. நல்ல வேளையாய்ப் பிராப்ளமும்கூடச் சின்னதாய்த்தான் வரும்.. இட்ஸ் ஓகே. அதைவிட நன்மைங்களும் ஏராளமாய் வரும் ஒங்க பள்ளிக்கூடத்தில் / காலேஜ்ல/ ஆபீஸ்ல நிறையப் பாராட்டுக் கிடைக்கப்போகுது.  அனுபவசாலிங்க ஒங்களைப் புகழுவங்க. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்க. கடமையை சரிவர செய்வீங்க.  எதையுமே தட்டிக் கழிக்கப் பார்க்காதீங்க. பேரன்ட்ஸ்ஸா நீங்க இருக்கீங்கன்னா ஒங்களுக்குப் பெரிய பொறுப்பு ஒண்ணு முடியும். ஹப்பாடா! அனேகமா அது உங்க கல்யாணமாய் இருக்கக்கூடும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நிறையப்புதிய பொறுப்புங்க வந்து அதனால பர்ஸ், பீரோ, பாஸ்புக் எல்லாம் நிறையும். அலுவலகத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா அடி எடுத்து  வைக்கறது நல்லது. இந்த வாரம் சனிக்கிழமை, வாழ்வில் முன்னேற்றம் தரக்கூடிய தகவல் வரும். ஃபேமிலியில் ஒற்றுமை பலப்படும். கேட்ட இடத்திலிருந்து ஹெல்ப் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக

விருச்சிகம்

நீங்க தைரியமா.. நம்பிக்கையோட எடுத்த காரியத்தைச் செய்து முடிக்கக் கொஞ்சம் அலைஞ்சு திரிய அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிங்களுக்கு கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் கிடைப்பது தாமதமாகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும். இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தனுசு

கட்டுப்படாமல் இருந்துக்கிட்டிருந்த செலவுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டுக்கடங்கி இது போல் பேங்க் பேலன்ஸை நீங்க கண்ணால பார்த்து ரொம்ப காலம் ஆச்சுன்னு முகம் மலர்வீங்க. வேறு ஆபீசுக்கு மாற இத்தனை காலம் தடையும் தாமதமுமாய் வந்துகிட்டு இருந்தது. இப்பதான் வேளை வந்திருக்கு. உங்களுடைய கவர்ச்சி அம்சம் முழு வீச்சில இருக்கும். வருவாரும் போவாருமாய் வீடு அமர்க்களப்படும். உங்களுக்கு இந்த விசேஷம் அந்த சுப நிகழ்ச்சின்னு சரியாய் இருக்கும். கடந்த சில வாரங்களா இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த சின்ன சண்டையும் நீங்கும். பிள்ளைங்க எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவுக்காரங்ககூட இருந்துக்கிட்டிருந்த கருத்து வேற்றுமை ஃபுல்லா நீங்கும். குடும்பத்துல சீரான போக்கு காணப்படும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, எதிர்பாராக்காத நன்மையும் பணவரவும் வந்து சந்தோஷத்தைக் களைகட்டச் செய்யும்

மகரம்

இத்தனை காலமாய் இருந்துக்கிட்டிருந்த சின்னச் சின்ன ஹெல்த் பிரச்னைங்க அல்லது நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் முடிவுக்கு வந்துடும். நண்பர்கள் மூலம் தேவையான ஹெல்ப்ஸ் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்துல ஒங்களோட பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவாங்க. மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான பயங்கள் முற்றிலும் நீங்கி நிம்மதி பிறக்கும். கணவர் / மனைவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க.

கும்பம்

இத்தனை காலமாய் உங்களோட முன்னேற்றங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த முட்டுகட்டைகள் விலகும். கலைத்துறைல உள்ளவங்களும் ஆபீஸ்ல வேலை பாக்கறவங்களும் அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லதுங்க. அரசியல்வாதிங்களுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமா யோசிச்சுச் செய்வது நல்லது. ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வியில் திறமை வெளிப்படும். உங்க வயசு எதுவாய் இருந்தாலும் உங்க துறை எதுவாயிருந்தாலும் வெற்றி பெறத் தேவையான ஹெல்ப்ஸ் கிடைக்கும். ஆர்டர் தொடர்பான காரியங்களில்  ஸ்லைட்டாய்த் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைபளுவும் இருக்கும். இதுக்காக ஒடனே டென்ஷன் ஆயிடாதீங்க. பிரச்னை ஏதும் வராது. பட்.. சக ஊழியர்கள் மேல் அதிகாரிங்களை அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. குடும்பத்துல உள்ளவங்களோட ஹாப்பியாய்ப் பொழுதைக் கழிப்பீங்க. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

மீனம்

பேசறதுக்கு.. குறிப்பா திட்டுவதற்கு அல்லது சாபம் விடுவதற்கு வாயைத் திறக்குமுன் ரெண்டு முறை .. நோ.. மூணு நாலு முறை யோசிச்சுக்குங்க. அதையும் விட பெட்ர் என்ன தெரியுமா? சைலன்ட் மோட்ல இருந்துடுங்க. உங்க கணவர் (அல்லது அல்லது மனைவி) நிறைய நன்மைகள் அடையப் போகிறார். பார்த்துப் பெருமிதப் படப்போறீங்க. என்னது? வேலை பிடிக்காமல் கம்பெனியில் பேப்பர் போடப்போறீங்களா? இப்பவா? நோ…நோ. வெயிட்டீஸ்.. இன்னும் கொஞ்சம் பொறுமை.  வியாபாரிங்களுக்கு உழைப்புக்கேற்றஅளவுக்கு சூப்பராய்ப் பலன் கிடைக்கும். அதனால  கொஞ்சம் சோம்பலைப் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்து பிசினஸ்ஸை கவனிங்க. ப்ளீஸ், திட்டம் எதுவாச்சும் போட்டிருந்தீங்கன்னா அது நல்லபடியா நிறைவேறுங்க. பெண்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வரப்போகுது. மனசை அதுக்கு ஹாப்பியா தயார் செய்துக்குங்க. யோகமான வாரம்.