மேஷம்

ஆலய வழிபாட்டுல ஆர்வம் காட்டுவீங்க. இந்த வாரம் சந்திச்சவங்களால சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைங்களோட நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரிசெய்து ஹப்பாடான்னு நிம்மதி காணுவீங்க. வழிபாட்டால் சந்தோஷம் அடைவீங்க. ஆரோக்கியம் சீராக ஆகாரத்துல கட்டுப்பாடு தேவைங்க.  திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீங்க. தொழில் ரீதியாக எடுத்த தீர்மானம் கரெக்டா நடந்தேறி நிம்மதியும், சந்தோஷமும், லாபமும் குடுக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். அதாவது அப்பா அல்லது தாத்தா வழியில் உள்ள வீடுநிலம் ஆகியவை பற்றி கோர்ட் கேஸ் ஏதாச்சும் இருந்தா அது நல்லபடியா முடியுங்க. கோர்ட் கேஸ்  சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். நாலு  சக்கர வாகனமோ அல்லது இரண்டு சக்கர வாகனமோ  வாங்கும் யோகம் உள்ளது.

ரிஷபம்

நெனைச்சதை முடிச்சு நிம்மதி காணுவீங்க. குழந்தைங்களோட நலனில் அதிக அக்கறை எடுத்துக்குவீங்க. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பு இன்கிரீஸ் ஆகும். அதாவது, பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவங்க உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியத்தை முடித்து சக்ஸஸ் ஆக்கிக் கொடுப்பர். வேலை பார்க்கும் இடத்தில், புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து போறது நல்லதுங்க. குறிப்பா கணவன் மனைவிக்குள்ளே சண்டை சச்சரவு வராம பார்த்துக்குக்குங்கமா. ரொம்பவே நெருங்கின நண்பர்களா இருந்தாலும் பண  விஷயத்துல கறாராக இருந்துடறது பெட்டர். உங்க வீட்டில் யாருக்காச்சும் குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருக்கீங்க என்றால்..   வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்குமுங்க. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். சந்தோஷம் ஃபவுன்டன்  மாதிரிப் பொங்கும்.

மிதுனம்

லாபகரமான வாரம். விரும்பிய விஷயத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீங்க. குடும்பத்துல கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்துல முன்னே இருந்ததைக் காட்டிலும் உயர்ந்த நிலை கெடைக்கும். இல்லத்துல நல்ல காரியம் நடைபெறும். மனசுல நெனைச்சதை மறுகணமே செய்து முடிப்பீங்க. ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீங்க. தொழில் வளர்ச்சி அதிகமாகி சந்தோஷம் தரும். நீங்க கலைத்துறையில் உள்ளவரா? எனில், பல வகைகளில் நல்ல வசதி  வாய்ப்புகள் தேடி வரும். பிரபலமான பெரிய மனிதர்கள்  அல்லது உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு மட்டுமின்றி அவங்களோட உதவியும் கிடைக்கும்.  பல வகைகளில் நல்ல வசதி  வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும்  சான்ஸ் வரும்.  பயணம் சந்தோஷம் தரும். செலவு கூடும். சந்தோஷமும் கூடும்.

கடகம்

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்படியான முயற்சிகள் செய்வீங்க. அவை வெற்றியாகவும் முடியும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். விலகிப்போன ரிலேடிவ்ஸ் தானா வந்து சொந்தம் கொண்டாடுவாங்க. ஒரு சில நன்மைகள் நடைபெறும். தனவரவு முன் எப்போதையும்விடவும் தாராளமாக இருக்கும். உத்தியோகத்துல மேலதிகாரிகளோட பாராட்டுகளை பெறுவீங்க. பெரிய மனுஷங்களோட சகவாசம் கெடைக்கும். ஆனா கவனமா லிமிட் வெச்சுப் பழகுங்க. வீடு வாங்க, அல்லது பிசினஸ் செய்ய அச்சாரம் போடுவீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாங்க.  இதைப் பல ராசிபலன்களில் படிச்சிருப்பீங்க. எனவே அலட்சியமா நினைக்காதீங்க. நெருங்கிய நட்பு வந்து கெஞ்சும்போது உங்களை மறந்து “டோன்ட் ஒர்ரி” என்று சொல்லியவாறு கையெழுத்துப்போட்டுவிட வாய்ப்பிருக்கு. ஜாக்கிரதை.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 7 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருப்பது நல்லது

சிம்மம்

இந்த வாரத்தின் ஆரம்பத்துலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தைக் கொஞ்ச நாளைக்கு போஸ்ட்போன் செய்யறது நல்லது. கொடுத்த வாக்கைக் காப்பாத்தி நல்ல பேர் எடுத்துடுவீங்க. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதோடு, எதிர்கால நல்வாழ்வுக்கும் பயனுள்ளதா அமையும். நண்பர்கள், உறவினர்களிடம் இனிமையாகப் பேச ஆரம்பிச்சு அவங்களை வியப்புக்குள்ளாக்குவதோடு.. உங்க பேச்சினால உங்களுக்கு நன்மையும் சின்னச் சின்ன லாபங்களும் கெடைக்கும். உங்க வீட்டுல நிச்சயதாத்தம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. அலுவலகத்தில் நிறை  குறைகள் இருக்கத்தாங்க செய்யும். வேலையில் கவனமா இருப்பது அவசியம். பதவி உயர்வு பற்றிச் செய்திகள் காதில் விழும். ஜாலிதான். நீங்கள் விரும்பிக்கேட்டிருந்த வெளியூர் மாற்றல் கிடைக்குதுமுங்க

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருப்பது நல்லது

கன்னி

குடும்பத்துல அமைதி நிலவும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய நண்பர்கள் உங்களோட முதலீட்டை அதிகரிப்பாங்க. இப்போ அறிமுகமாறவங்க நீண்ட காலத்துக்கு நட்பாயிருந்து உதவுவாங்க. கணவன் மனைவிக்குள்ள முன்பு இருந்துக்கிட்டிருந்த சண்டை சச்சரவுகள் மெல்லக் குறைந்து ஒற்றுமை மெல்ல மெல்ல அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் வெற்றியும், அதன் மூலம் பண வரவும் ஏற்படும். தொழில் சம்பந்தமான முன்னேற்றமும், உயர்வான பதவிகளும் சிலர் பெறக்கூடும். பட் ஒன் திங். எந்த நன்மையும் கொஞ்சம் நிதானப்போக்கிலும் லேசான டென்ஷனை உடன் அழைச்சுக்கிட்டும்தான் ஒங்களை வந்தடையும். அதனால் என்னங்க. இறுதி வெற்றி முழு வெற்றியா இருக்கும். அதுதானேங்க நமக்கு இம்பார்ட்டென்ட்? நீங்க பிசினஸ் செய்பவரா? எனில், வியாபாரம்  சாதகமாக இருக்கும். பார்ட்னர் அனுசரணையா இருப்பாங்க.  புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருப்பது நல்லது

துலாம்

உத்தியோகத்துல சிலருக்கு, விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். ஒரு சிலருக்கு சகப் பணியாளர்களின் வேலையையும் செய்ய நேரிடும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இந்த வாரம் மட்டும் கொஞ்சம் குறையும். ஆனா சீக்கிரத்தில் நாலு கால் பாய்ச்சலில் கிளம்பும். நன்மை தரும். நீங்க ஒர்க் பண்ணும் இடத்தில் பணியாளர்களின் திறமையைப் பாராட்டி ஊக்கத்தொகை, சம்பள உயர்வு வழங்கி உற்சாகமூட்டுவாங்க. குடும்பத்துல பண வரவு அதிகரிக்கும். அதனால சந்தோஷப்போக்கு நிலவும். செல்வாக்கு படைத்த உறவினர் உதவுவார். வீட்டிலோ வேலை பார்க்கும் இடத்திலோ உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்களால சில அதிருப்திகள் வந்து  நீங்கும்.  குடும்பத்துல சுப செலவுகள் ஏற்படுமுங்க.  மகன் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். கடினமான பணிகளையும் அநாயாசமாச் செய்து நல்ல பெயர் எடுத்துடுவீங்க.

விருச்சிகம்

உங்க சொந்த ஆரோக்கியத்துல கவனம் வைச்சுட்டீங்கன்னா பிரச்னை இல்லாத வாரம் இது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் முன் எப்போதையும்விடவும் அதிகரிக்கும். ஆபீசில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தந்தையுடன் விவாதம் செய்வதை அவாய்ட் செய்துடுங்க. நண்பர்களால் சில சின்னச்சின்ன நன்மைகள் ஏற்படக்கூடும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வீங்க. ஒங்களோட வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் கட்டாயம் கெடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்படும். சிகிச்சைல உள்ளவங்க பூரண குணம் அடைவீங்க. அது பத்தி நீங்கச ரொம்பவே பயந்துக்கிட்டிருந்தீங்களே. இப்போ இதுக்கா பயந்தோம்னு சிரிப்பீங்க.  நீங்க எந்த மதத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் பல வழிபாட்டு  ஸ்தலங்களுக்குப் போகணும்னு நினைச்சிருந்த உங்களோட ஆசை மெல்ல நிறைவேறும். எஸ்பெஷலி குல தெய்வம்.

தனுசு

பணவரவு திருப்தி தரும் வகைல இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுங்களும் ஏற்படக்கூடும் என்பதால கொஞ்சம் மனசையும்  கார்டையும் ரெடியா வைச்சுக்குங்க. பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரும் சான்ஸ் ஏற்படும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அதாவது.. கைமாத்து எதுவும் குடுக்கவும் வேணாம்.. வாங்கவும் வேணாம். சகோதரர்கள் மற்றும் சிஸ்டர்ஸ் மூலம் ஹெல்ப் உண்டு. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செலவுகளும் அலைச்சலும் ஏற்படும்.  அதனால பரவாயில்லை. நல்ல முறைல வேலை முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவிஉயர்வு மற்றும் சம்பளஉயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தற்காலிகப் பணியில் உள்ளவங்களுக்கு பணி நிரந்தரமாகும். பதவி உயர்வு கெடைக்கவும் கொஞ்சம் வாய்ப்பு உண்டு. குட் லக்.

மகரம்

தவறிப்போயோ.. வெளையாட்டாவோகூடப் பிறரை விமர்சிக்க வேணாங்க. அப்பிடி விமர்சிக்கறதால பிரச்சினைகள் ஏற்பட சான்ஸ் இருக்கு. குடும்பத்துல யாருக்கேனும் முயற்சி செய்துக்கிட்டிருந்த வரன்கள் முடிவடைவதுல தாமதங்கள் உருவாகலாம். டோன்ட் ஒர்ரி. விரைவில் சந்தோஷ நியூஸ் உண்டு. மறதியால அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். எனவே அப்பிடி நேராமல் இருக்க என்ன செய்யணும்னு முன்னெச்சரிக்கையாவும் கவனமாவும் இருந்துட்டீங்கன்னா நோ பிராப்ளம். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய்  வீட்டிலிருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். வெளிநாட்டுல இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வர விரும்பி சந்தோஷமா வருவீங்க.  வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நல்லதுங்க. நண்பர்களிடம் அதிக நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லதுங்க.

கும்பம்

வேலைப்பளு அதிகரிக்கும். இருப்பினும் அதற்கேற்ற வருமானம் வந்து சேரும். நீங்க திட்டமிட்ட விஷயங்கள் பலவற்றில் முன்னேற்றமான பலன்கள் ஏற்பட்டாலும், சிறு சிறு தடங்கல்களும் காணப்படும். வீடு அல்லது மனை வாங்கும் எண்ணம் உள்ளவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எல்லாம் தன்னிச்சையாக் கனிஞ்சு பலன் தரும். கடமைல கண்ணும் கருத்துமா இருந்து, தடைகளைத் தாண்டி முன்னேறுவீங்க. எதிர்பார்த்த தன வரவுகள் தாமதப்பட்டாலும், நீங்க திருப்பிக் குடுக்க வேண்டியவர்களுக்கு டாண்ணு குடுத்து நல்ல பெயர் எடுத்துடுவீங்க. குழந்தைங்களோட நடவடிக்கைfள் பற்றி இருந்துக்கிட்டிருந்த கவலைகள் தீரும். . ஆடல், பாடல்  போன்ற கலைத் துறையில் உள்ளவங்களுக்கு  ஃபாரின் போக வாய்ப்பு கிடைக்குமுங்க. கணவர் அல்லது மனைவியின் பெற்றோர் உடல்நலம் பற்றி இருந்த கவலைங்க குறையும். சண்டை போட்டுப் பிரிஞ்சிருந்த ஒங்களோட குடும்பம் சேர்ந்து குதூகலிக்கும்.

மீனம்

வருமானம் திருப்தி தரும். வீட்ல யாருக்கேனும்… திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்துக்கிட்டிருந்த பிற்போக்கான நிலை மாறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாயாரின் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியமுங்க. கவர்மென்ட் காரியங்கள் முடிவதில் லேசான தாமதம் காணப்படுகிறது. ஆபீசில் உங்க திறமை வெளிப்படும். நல்லதொரு பதவி உங்களைத் தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். அதிகாரிங்க ஒங்களோட வளர்ச்சியில் அக்கறை காட்டுவாங்க. மாமன், அத்தை வகை உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பெற்ற மகன் அல்லது மகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் உண்டாகும். அவசரத் தேவைக்காக சகோதர சகோதரிகள் வாங்கிய கடனை அடைப்பீங்க.