’மிஷன் மஜ்னு’ என்கிற த்ரில்லர் திரைப்படம் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.

சித்தார்த் மல்ஹோத்ரா ர நாயகனாக நடிக்கவுள்ள இந்தத் திரைப்படம் பாகிஸ்தான் நாட்டில் இந்தியா நடத்திய ரகசிய உளவு வேலை பற்றிய கதையாக உருவாகிறது.

ஆர் எஸ் வி பி மூவிஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பர்வேஸ் ஷேக், அஸீம் அரோரா, சுமீத் பதேஜா திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

2021 பிப்ரவரி முதல் ’மிஷன் மஜ்னு’வின் படப்பிடிப்புத் தொடங்குகிறது.