இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவுகளில் அழிந்து வரும் அரியவகை பாலூட்டியான காண்டாமிருகத்தின் கன்று குட்டிகள் இரண்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

ஜாவா தீவில் உள்ள உஜுங் குலோன் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் இந்த இரண்டு குட்டிகளின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று முதல் ஓராண்டுக்குள் இருக்கும் இந்த இரண்டு குட்டிகளும் அரண் போன்ற அடுக்கடுக்கான தோல் அமைப்பை கொண்ட ஜாவன் வகை காண்டாமிருகங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் இருந்த இந்தவகை காண்டாமிருகத்தின் எண்ணிக்கை 73 ஆக குறைந்துவிட்டது, தற்போது இந்த சரணாலயத்தில் மட்டும் தான் இந்த வகை உயிரினம் உள்ளது.