தமிழ் திரைப்படங்களில் தனி முத்திரை பதித்த இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். நமா பிக்சர்ஸ் தயாரிப்பில் , மஹஸ்வேதா தேவி என்பவர் எழுதிய ‘ஆரண்யர் அதிகார்’ எனும் வங்காள மொழி நாவலை தழுவி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குகிறார் பா.ரஞ்சித் .

கடந்த ஆண்டு நவ.15ம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் என இதுவரை தேர்வு செய்யாத நிலையில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.