திடீர் உடல் நலக்குறைவு: மத்திய அமைச்சர் பஸ்வான் மருத்துவமனையில் அனுமதி

Must read

பாட்னா:

மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநிலத்தில் இயங்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக இருப்பவர் ராம்விலாஸ் பஸ்வான். இவர் தற்பேதைய மத்திய அரசில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக  பொறுப்பு வகித்து வருகிறார்.

பீகார் தலைநகர் பாட்னா வந்த இவருக்கு இன்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், உடனடியாக அ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு வசர சிகிச்சை பிரிவில்,  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article