உ.பி.: ராம ஜென்ம பூமியில் ராகுல்காந்தி: பாஜக கிண்டல்!

Must read

உ.பி.
னது கிசான் யாத்திரையின்  போது  காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய அயோத்திக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
1rahulஅடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உ.பி.  சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை முடிக்க முடிவெடுத்து, இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி 2500 கிலோ மீட்டர் கிசான் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின்போது விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்த தேர்தல் பிரசார யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் உ.பி மாநிலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதிக்கு சென்றார். அப்போது, அங்குள்ள அனுமன் கோவிலில் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
1992-இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்புக்குப் பின் முதல் முறையாக ராமஜென்ம பூமிக்கு செல்லும் நேரு குடும்பத்து வாரிசு ராகுல்காந்தி ஆவார்.
அயோத்தியில் தெருக்களில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்துவரும் ராகுல் பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு செல்லாமல் அருகில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்தார்.
1a-rahul
இதுகுறித்து, பா.ஜ.கவின் பேச்சாளார் சித்தார்த்த நாத் சிங் கூறியது:   “அயோத்தி விவகாரத்தில் சதா பா.ஜ.கவை கிண்டல் செய்யும் ராகுல், ராமரின் சக்தியை புரிந்துகொண்டுதான்,  அயோத்திக்கு வந்து ராமரிடம் அருள் பெற காத்திருப்பதாக கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ்,    ராகுலின் கிசான் யாத்திரையின் ஒரு பகுதிதான் அயோத்தி பிரசாரம் என்று இதற்கு விளக்கமளித்துள்ளது.
2014 தோல்விக்குப் பின் காங்கிரஸ் மிதவாத இந்துதுவப்போக்கை கடைப்பிடிக்க முடிவெடுத்திருப்பதாக சில வதந்திகள் உலவும் வேளையில் ராகுலின் ராம ஜென்ம பூமி விசிட் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக சில அரசியல் விமர்ச்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article