ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை: 3வது நீதிபதி முன் இன்று விசாரணை!

Must read

சென்னை:
ராம்குமார் உடல் பரிசோதனை செய்வது பற்றிய வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதையடுத்து இன்றாவது அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ramkumarதற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில், இறந்த ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  ராம்குமாரின் பிரேதத்தை பரிசோதனை செய்யும்போது தங்களது  தரப்பு மருத்துவரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அவரது தந்தை பரமசிவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு  3வது நீதிபதி நீதிபதி விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று விசாரணைக்கு வரும் எதிர்பார்த்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

More articles

Latest article