ஒருபக்கம் சுதேசி கோஷத்தை வலுவாக முழங்கிவரும் பாபா ராம்தேவ இன்னொரு பக்கம் தனது பதஞ்சலி நிறுவன கிளைகளை பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளிலும் திறக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.

baba_ramdev

சமீபத்தில் சீனப் பொருட்களை புறக்கணியுங்கள் என்று பாபா ராம்தேவ் செய்த ட்வீட் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியர்களை அந்நியப் பொருட்களை புறக்கணிக்கச் சொல்லும் நீங்கள் அந்நிய நாடுகளில் போய் ஏன் இந்தியப் பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டதற்கு பாபா ராம்தேவ் இந்தியாவில் வந்து நடிக்கும் பாகிஸ்தான் நடிகர் நடிகைகளை கடுமையாக விமர்ச்சித்து பதிலளித்தார்.

baba_ramdev1

நான் பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்து நடித்து சம்பாதித்து அப்பணத்தை தங்கள் நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போகும் அவர்களைப்போல செய்ய மாட்டேன். நாங்கள் பாகிஸ்தானில் பதஞ்சலி நிறுவனம் திறந்தால் அதில் கிடைக்கும் பணத்தை அந்நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே செலவிடுவோம் என்று கூறினார்.
உரி தாக்குதலுக்கு இந்தியப் படங்களில் பணியாற்றி சம்பாதிக்கும் எந்த பாகிஸ்தான் கலைஞர்களும் கண்டணம் தெரிவிக்கவில்லை. இவர்கள் என்ன விதமான மனிதர்கள்! இவர்களுக்கு தாங்கள் பணியாற்றும் படம், கோடி கோடியாக சம்பாதிப்பது, பிரியாணி சாப்பிடுவது இதுபற்றி மட்டுமே கவலை, இந்தியர்கள் காட்டுமிராண்டித்தனமாக உரியில் கொல்லப்பட்டது பற்றி கவலையே இல்லை என்று விளாசித் தள்ளினார்.
மேலும் யோகாவும் ஒரு கலைதான், தான் அந்தக் கலையை பாகிஸ்தானுக்கும் கொண்டு செல்ல தயார் என்றும் அவர் தெரிவித்தார்.