ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் கொலை விவகாரம், அரசியலாக வும், மதச்சாயமும் பூசப்பட்ட நிலையில், மாவட்ட எஸ்.பி. வருண்குமார் அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலையானது,  இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் இந்துமுன்னணியை சேர்ந்தவர் என்றும், கொலை செய்தவர்கள் போதை மருந்து கடத்தல் செய்து வந்த  கும்பல் என்றும் தகவல்கள் பரவியது.

இந்த படுகொலை, மத சாயம் பூசப்பட்டு, மதமோதல்களாக மாற்றும் முயற்சியில் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்கள் பதிவிட்டு வந்தனர். விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைத்த காரணத்தால், இளைஞர் இஸ்லாமிய கும்பலால்  கொலை செய்யப்பட்டதாக  என பாஜகவினர் தகவல்கள் பரப்பி வந்தனர்.

 இதையடுத்து, கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, மாவட்ட எஸ்.பி.வருண்குமார், செய்தியாளர்களிடம் பேசி, மத மோதலாக மாற்ற நடைபெற்ற முயற்சியை முறியடித்தார். அப்போது,  இந்த கொலை  சம்பவம் மத ரீதியான பிரச்சனை இல்லை இருதரப்பினர்கிடையான பிரச்சினையே’ என அறிக்கை வெளியிட்டு அமைதியை ஏற்படுத்தினார்.

எஸ்.பி.யின் நடவடிக்கைக்கு இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்த நிலையில், இந்து அமைப்பினர், எதிர்தாக்குதலை தொடங்கினர். எஸ்.அருண்குமார் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என புகார்கள் கூறப்பட்டது.

இதையடுத்து, எஸ்.பி வருண்குமாரை தமிழகஅரசு இடம் மாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் இடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.