ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிப்பு: மாணவர்கள் அவதி

Must read

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய  அரசுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

பலத்த காற்று வீசுவதால் தான் மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது என்றும், விரைவில் மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்றும் மின் வாரிய தரப்பில் இரு நாட்களுக்கு முன்பு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த போதும், இதுவரை மின்சார சீரடையவில்லை என்றே சொல்லவேண்டும்.

More articles

Latest article