டாடா குழும தலைவராகிறார் ராமதுரை?

Must read

டில்லி,
ந்தியஅரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ராமதுரை, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ramadurai1
மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்எஸ்டிசி) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமையின் (என்எஸ்டிஏ) தலைவராக இருந்தவர் எஸ்.ராமதுரை. இவர் திடீரென  தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதன் காரணமாக அவர் மீண்டும் டாடா குழுமத்துக்கு செல்கிறார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
71 வயதான ராமதுரை, மத்திய அரசின் கேபினட் அந்தஸ்து பதவியில் உள்ள அதிகாரி.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு,  மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, என்எஸ்டிசியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவும் ராமதுரை பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இவர், கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, பணியில் திருப்தியில்லை என்று கூறி 500 ஊழியர்களை  அதிரடியாக வேலையை விட்டு நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
1996-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியில் இருந்தார்.
ராமதுரை ராஜினாமாவை அடுத்து, என்எஸ்டிசி இயக்குநர் குழு இன்று கூடுகிறது. என்எஸ்டிசி யில்,  புதிய தலைவர்  நியமனம் செய்யும் வரை துணைத்தலைவர் ரோகித் நந்தன் தலைவராக இருப்பார் என அறிவிக்கப் பட்டு உள்ளது.
ramadurai
பிரதமர் மோடி, ராமதுரையின்  ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தாகவும் தகவல்கள் தெரிவிக்கின் றன. ஆனால்,  இது குறித்து ராமதுரை கருத்து எதுவும் கூறவில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இது தவிர டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோசியல் சயின்ஸஸ், ஏர்ஏசியா இந்தியா மற்றும் பிஎஸ்இ ஆகிய நிறு வனங்களின் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்தவர். டாடா சன்ஸ் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி சமீபத்தில் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இடைக்கால தலைவராக ரத்தன் டாடா பொறுப்பு வகிக்கிறார்.
எனவே,  சைரஸ் மிஸ்திரி இடத்தில் இன்னும் 4 மாதத்தில் புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு, இதற்கான குழு அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் முக்கியமான பதவியில் இருந்து ராமதுரை விலகியிருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article