த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.
இதில் பிரதமர் மோடி மற்றும் 200 வி.வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள்.


அயோத்தியில் பூமி பூஜை நடப்பதை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து லக்னோவில் நேற்று உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை செயலாளர் ஆர்.கே.திவாரி,, போலீஸ் டி.ஜி.பி. ஹிதேஷ் சந்திரா அஸ்வாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேட்டி அளித்த டி.ஜி.பி. அஸ்வாதி ‘’இந்த விழாவுக்கு வரும் மோடியின் உள்பாதுகாப்பு ( இன்னர் ரிங்) பணிகளை எஸ்.பி.ஜி. படையினர் மேற்கொள்வார்கள்’ என்று தெரிவித்தார்.
‘’ அவர்களை நெருங்கி அடுத்த வளையத்தில் நிற்கும் பாதுகாப்பு போலீசார், 45 வயதுக்கு உள்பட்டவர்களாக, கொரோனா பாதிப்பு இல்லாதவர்களாக இருப்பார்கள்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
’’அந்த போலீசாரை தேர்வு செய்வதற்கு பல போலீஸ் நிலையங்களிலும், ஆயுத போலீஸ் வளாகத்திலும் கொரோனா பரிசோதனை கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது’’ என்று டி.ஜி.பி. ஹிதேஷ் சந்திரா அஸ்வாதி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே , கொரோனா தொற்று இல்லாத 300 போலீசார்,பரிசோதனை நடத்தப்பட்டு, வி.வி.ஐ.பி.க்கள் பாதுகாப்புக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதாக அயோத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-பா.பாரதி.