டோலிவுட் பிரபலம் ராம் சரண் தேஜா – உபாசனா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் உபாசனாவுக்கு பிரசவம் நடந்தது.

ராம் சரண் தேஜா தந்தையானதை அவரது தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டரில் பகிர்ந்தார்.

“எங்கள் வீட்டிற்கு ஒரு குட்டி இளவரசி வந்திருக்கிறாள். ராம் சரண் – உபாசனா இருவரையும் பெற்றோர் ஆக்கியது மட்டுமல்லாமல் எங்களை தாத்தா பாட்டி ஆக்கியதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

ராம் சரண் தேஜா-வுக்கு ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட கோலிவுட் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.