யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர், தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பேரணியை நிறைவுசெய்யும் விதமாக ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திரண்டனர்.

இந்தப் பேரணி, கிழக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள பொதுவிள் என்ற இடத்தில் தொடங்கி, கிழக்கு மாகாணங்கள் மற்றும் வன்னி வழியாக பல ஊர்களின் வழியாக கடந்துவந்து, கடைசியாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பொலிகண்டியில் நிறைவுற்றது.

இந்தப் பேரணியானது, பல சிவில் அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்ற ஒன்றாக அமைந்தது. மேலும், தமிழ் மற்றும் முஸ்லீம்களின் அரசியல் கட்சிகளை சேர்ந்த பல சட்டசபை உறுப்பினர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியில், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணி நடைபெற்ற கடந்த 5 நாட்களிலும், இதை தடைசெய்வதற்கு சிங்கள காவல்துறை, கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி முயன்றது.

ஆனால், அரசின் சார்பாக மேற்கொள்ளப்படும் இதர கூட்டம்சேர் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, இந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் ஏற்பட்டாளர்கள்.