ரக்ஷா பந்தனையொட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் 14 லட்சம் மாஸ்க்குகள் வினியோகம்

Must read

ராய்கார்:   
ட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை மக்களுக்கு போலீசார் விநியோகிக்க உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இயக்கத்தின் பெயர் ரக்ச சூத்ரா மாஸ்க்கா. ராய்காரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள மக்களுக்கு  தன்னார்வலர்களின் உதவியுடன் மாஸ்க் விநியோகிக்கப்படும் என்று நேற்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்தே ராய்கார் காவல்துறை வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் உணர்த்துவதற்காக பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக ராய்காரில்  கொரோனா தொற்று அதிகமாகி வருவதாக ராய்கார் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வரை 223 பேருக்கு ராய்காரில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஆதரவுடன் 14 லட்சம் மாஸ்க் வினியோகிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாஸ்க்குகளை விநியோகிக்கும் பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிரலாம் என்றும்  இந்த ரக்ஷா பந்தனை மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கொண்டாடும் படியும், ஒருவருக்கொருவர் மாஸ்க்கை பகிர்ந்து கொள்ளும்படியும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article