ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்குச்சந்தையின் முன்னனி முதலீட்டாளர். இவர் பங்குச்சந்தையின் குரு என்று அழைக்கப்படுகிறார். வரும் 2021-ஆம் ஆண்டு ஜூலை 5- ஆம் தேதி 60 வயது ஆகிறது. அந்நாளில் 5 ஆயிரம் கோடி அல்லது தனது சொத்தில் 25% இதில் எது குறைவோ அதை சமுதாயத்துக்கு நன்கொடையாக கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.
jhunjhunwala
தனது கவலையெல்லாம் நாளைக்கு என்ன சம்பாதிக்கப் போகிறேன் என்பதல்ல எனது லட்சியமான 5000 கோடியை எப்படி சம்பாதித்து இந்த சமுதாயத்துக்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்பதுதான். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்கள். தன்னால் முடிந்த ஒரு 10 ரூபாயை தானம் செய்யும் ஒருவர் என்னைவிட எவ்விதத்திலும் குறைந்தவரல்ல என்கிறார் ஜுன்ஜுன்வாலா.
முதலீடு செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன என்று கேட்ட பொழுது, முதலாவது வீடு கட்டுவதில் அல்லது வாங்குவதில் பணத்தை முதலீடு செய்யுங்கள், தங்கத்தில் முதலீடு செய்வது உங்கள் கடைசி தெரிவாக இருக்கட்டும் என்று இளைஞர்களுக்கு பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அறிவுரை கூறியுள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்வதைவிட வீட்டுக்காக செய்யும் முதலீடு உங்களுக்கு பாதுகாப்பை உருவாக்கும். அதுமட்டுமன்றி இருப்பிடம் என்பது ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவையாகும் என்று அவர் குறிப்பிட்டார். நான் டனிஷ்க் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தாலும் நகையில் முதலீடு செய்வது உங்கள் கடைசி தெரிவாக இருக்கட்டும் என்பதுதான் இந்தியாவின் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் எனது அறிவுரையாக இருக்கும் என்று கூறுகிறார்.
நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், முதலாவது நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டும். உங்கள் செலவுகளை நன்கு ஆராய்ந்து செய்யுங்கள், அதே நாரத்தில் கஞ்சத்தனமாகவும் இருக்காதீர்கள். நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே ஒரு சமநிலையை கடைப்பிடியுங்கள் என்று அவர் அறிவுரை கூறுகிறார்.