ஆர்.டி.ஐ. திருத்த மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது

Must read

டில்லி:

திர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில்  ஆர்.டி.ஐ. திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன.

மசோதாவைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், ஆர்டிஐ திருத்த மசோதா மாநிலங்களவையிலும்  நிறை வேற்றப்பட்டது.

மக்களவையில் தனிப் பெரும்பான்மையுடன்  பாஜக இருப்பதால், பல்வேறு மசோதாக்களை எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் மீறி  அறிமுகம் செய்து வருகிறது. ஆனால், மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு போதிய அளவு பலம் இல்லாததால், சில மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,  கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளின் உதவியை பாஜக நாடி வருகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக  ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த கட்சிகளின் உதவியுடன், தற்போது ஆர்டிஐ திருத்த மசோதாவை பாஜக மாநிலங்களையில் நிறைவேற்றி உள்ளது.

மாநிலங்களவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவை தேவை. தற்போது பிஜூ ஜனதா தளம், பிடிபி, டி.ஆர்.எஸ். மற்றும் ஒய்.எஸ். ஆர். கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால், மசோதா பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article