தமிழகத்தில் ஜூலை 18ந்தேதி 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல்! தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Must read

டில்லி:

மிழகத்தில் காலியாக உள்ள மாநிங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ந்தேதி நடைபெறும் என அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மாநிலங்களையில் காலியாக உள்ள   60 இடங்களுக்கு விரைவில்  தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்,  தமிழகத்தில் ஜூலை 18ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா, கனிமொழி, மைத்ரேயன் உள்பட 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

காலியாகும் 6 தொகுதிகளில் 3 எம்பிக்களை திமுகவும், 3 எம்.பி.க்களை அதிமுகவும் பெற வாய்ப்பு உள்ளது.

திமுக சார்பில், ஏற்கனவே அறிவித்தபடி வைகோவுக்கு ஒரு தொகுதியும், ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. மற்றொரு தொகுதி யாருக்கு கிடைக்கப்போகிறது என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதுபோல, அதிமுகவில் ஒரு எம்.பி. தொகுதி கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்ற இரண்டு தொகுதிகளை பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை.

காலியாகும் 6 இடங்களில் போட்டியிடுவதற்கும் ஜூலை 1ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.  .

More articles

Latest article