சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் திமுக  வேட்பாளர்கள் கனிமொழி சோமு. கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தனர்.

ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவைச்சேர்ந்த கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வு பெற்றதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை  ராஜினாமா செய்தனர். இதனால்,  காலியான 2 இடங்களுக்கு தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் திமுக சார்பில்,  மருத்துவர் அணி மாநில செயலாளர் மருத்துவர் கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் இருவரும் போட்டியிடுவர்வார் என திமுக தலைமை அறிவித்தது.

இதையடுத்து,  திமுக வேட்பாளர்கள்  இன்று சட்டப்பேரவைச் செயலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுகவுக்கு சட்டப்பேரவையில் அருதிப்பெரும்பான்மை இருப்பதால், இரு திமுக  வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. அதிமுக எதிர்த்து போட்டியிடாத நிலையில்,  இருவரும் போட்டியின்றி தேர்வது உறுதியாகி உள்ளது. இதன்மூலம்  மாநிலங்களவையில் தி.மு.கவின்  பலம் 10 ஆக அதிகரிக்கிறது.