செப்டம்பர் 21-2001. தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள்.  தமிழ்நாட்டின் முதல்வராக அப்போது இருந்த ஜெயலிதாவின் பதவியை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக அதிரடி தீர்ப்பு வழங்கியதும், அதையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, முதல்வராக அறிவித்து, அவர் முதன்முதலாக முதலமைச்சராக பதவி ஏற்றதும் இன்றைய நாளே.

1991-1996ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா, வருமானத்தை மீறி ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்தார். ஆனால், அவர்  தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவரும், அவரது தோழியும்,  வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதுமட்டுமின்றி, அரசு சொத்துக்களை (டான்சி) வளைத்து போட்டது, வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம், சசிகலாவுடன் சேர்ந்து கும்பமேளாவில் ஆடம்பர குளியல், ரவுடிகள் அராஜகம் என பல காரணங்கள் இந்த பின்னணியில் இருந்தன. இதனால் அவரது  ஜெயலலிதா ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

இதையடுத்து, அவர்மீது, ஜனதாக் கட்சித் தலைவராக இருந்த சுப்ரமணியன் சுவாமி (இப்போது பாஜக உறுப்பினர்) ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடந்தார். இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், பின்னர்  1996ம் ஆண்டு திமுக ஆட்சியை கைப்பற்றியதும், ஜெ.மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசுவரூபம் எடுத்தது.  விசாரணை அதிகாரி நல்லமநாயுடு நியமிக்கப்பட்டு, ஜெயலலிதா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தனி நீதிமன்றம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்ததப்பட்டு,  தனி நீதிமன்றத்தில்  குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார். இதுதொர்பான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இதற்கிடையில் மீண்டும் 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 2001ம் ஆண்டு மே 14ந்தேதி மீண்டும் மாநில முதல்வரானார்  ஜெயலலிதா. ஆனால், அவரால் தொடர்ந்து முதல்வர் பதவியில் தொடர முடியவிலலை. அவர்மீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதனால், ஜெயலலிதா தகுதி நீக்கத்துக்கு ஆளானார்.  முதல்வர் பதவி தானாகவே பறி போனது. இதனால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
2001ம் ஆண்டு தமிழக முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றபோது…
இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமோ என எதிர்பார்த்த நிலையில்,  அன்றைய தினமே, தனக்கு நம்பிக்கைக்கு உரியவராக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக அறிவித்தார்.  ஓபிஎஸ் அன்றே தமிழ்நாட்டின்  முதல்வராக பதவி ஏற்றார்.
இதனால் செப்டம்பர் 21ந்தேதி தமிழக வரலாற்றின் மறக்க முடியாத நாளாக பதிவாகி உள்ளது. 20ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வு, ஊழல் செய்யும் அரசியல்வாகிகளுக்கு ஒரு படிப்பினை.