டெல்லி:  மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் நியமித்த நிலையில், ஏப்.10-ஆம் தேதி அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா்.

இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல்  வரும் 17ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே தொடா்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலையில், அப்பதவிக்கு அவா் மீண்டும் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே மாநிலங்களவைத் தலைவா், துணைத் தலைவா் இல்லாத வேளைகளில், அந்த அவையை வழிநடத்தும் குழுவை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன்  மாற்றியமைத்துள்ளார். அதன்படி அந்தக் குழுவில், அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜக எம்.பி.க்கள் தினேஷ் சா்மா, பாங்னோன் கோன்யாக், கன்ஷியாம் திவாரி, பிஜு ஜனதா தள எம்.பி. சஸ்மித் பத்ரா, காங்கிரஸ் எம்.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடுவார்களா என்பது இன்று தெரிய வரும்.

[youtube-feed feed=1]