டெல்லி: மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் கடந்த .1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கூடிய மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவை நாளை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு அறிவித்துள்ளார்.