மலையாளத்தில் அனுராக கருக்கின் வெள்ளம் படத்தின் மூலம் 2016 இல் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு கிடைத்தது.

கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். அவருக்கு தெலுங்கின் முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தெலுங்கின் மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்கு வாய்ப்பு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சரத் மன்தவா இயக்குகிறார். படத்துக்கு இசையமைப்பது தமிழரான சாம் சிஎஸ்.