விஜய் சேதுபதியின் ‘800 ‘ படத்தின் நாயகியாகும் ரஜிஷா விஜயன்….!

Must read

இலங்கை கிரிக்கெட் அணியில் பிரபலமான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படம் ‘800’.

‘கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு, இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் ரஜிஷா விஜயன்.

ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளன.

விஜய் சேதுபதி, ரஜிஷா விஜயன் ஆகியோருடன் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article