ரகசிய திருமணம் செய்துகொண்ட ரஜினி நாயகி

Must read

பாலி” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, ரகசிய திருணம் செய்துகொண்ட தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

ராதிகா ஆப்தே எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகைதான். ஏற்கெனவே இவரது அரை மற்றும் முழு நிர்வாண வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தின.

பிறகு “கபாலி” படத்தில் ரஜினிக்கு ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

ஆனால் அதன் பிறகு இவரை ஆளையே காணோம். லண்டனில் ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்று தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

2011ஆம் ஆண்டு நடனம் கற்க லண்டன் சென்ற ராதிகா அங்கு பெனெடிட் டெய்லர் என்ற இசையமைப்பாளரைச் சந்தித்துள்ளார். பார்த்த உடனே பற்றிக்கொண்டதாம்.  காதலில் உருகிய இருவரும் அங்கேயே சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

சிறிது காலம் கழித்து இந்தியா வந்த ராதிகா, மீண்டும் நடிக்க ஆரம்பிக்க.. காதலர் இங்கே வந்து சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற ராதிகா, அங்கே தனது காதலரை முறைப்படி திருமணம் செய்துகொண்டாராம். ஆனால் தனது திருமணத்துக்கு தனக்கு நெருக்கமானவர்களைக் கூட அழைக்கவில்லையாம்.

ரகசியமாக திருமணம் நடந்திருக்கிறது. இப்போது தான் அந்த விசயம் வெளியே வந்திருக்கிறது.

 

 

More articles

Latest article