சென்னை;  நடிகர் ரஜினிகாந்துக்கு  இன்று பிறந்தநாள். இதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்துக்கு இன்று 73வது பிறந்தநாள். இதையொட்டி, அவரது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளை செய்து வருகின்றனர். மேலும், அவரிடம் வாழ்த்து பெற அவரது வீட்டின் முன்பு வழக்கமாக ரசிகர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையில் ரஜினிகாந்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் திரைப் பிரபலங்கள்  என  பலரும் தங்களது வாழ்த்துகளை  தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், “அன்பிற்கினிய நண்பர் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் பல வெற்றிப் படங்களைத் தந்து உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]