சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 850 மதுபான பார்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நடத்தும்  மொத்த டாஸ்மாக் மதுபான கடைகளின் எண்ணிக்கை 6823. சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும்  சுமார் 900 மதுபான கடைகள் உள்ளன. ஆனால்  2739 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன. 2851 மேல்நிலைப் பள்ளிகள்  என மொத்தம்  5590தான் உள்ளன.  அரசு, வருமானத்தை குறிக்கோளாக கொண்டு, பள்ளிகளை விட மதுபான கடைகளை அதிக அளவில் திறந்து, தமிழ்நாட்டின் இளைய தலைமுறையை குடிகாரர்களாக மாற்றி வருகிறது.
இந்த நிலையில், மேலும், 850 மதுபான பார்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.  இதற்கான டெண்டர் பணிகள் முடிவடைந்து, ஓரிரு நாளில், பார்கள் ஒதுக்கப்பட உள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் மதுபானத்தால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதுடன், பள்ளி மாணவ மாணவிகளிடமும் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.
சென்னை மற்றும் புறநகர்களில சுமார் 900 மதுபான கடைகள் உள்ளன. இதில் 850 மதுபான கடைகளின் உரிமம் 16 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது.  இருந்தாலும் பல இடங்களில் சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டு வருகிறது. மதுபான கடைகள் மட்டுமின்றி, முட்டுச்சந்துகள் மற்றும் ஒதுக்குப்புறமாக பகுதிகளிலும் சட்டவிரோத மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,  பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு   டெண்டர் கோரப்பட்டிருந்தது.  இந்த டெண்டர்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி நாளை ஆணையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளத.
அதன் பிறகு உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தப்போகும் கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் ஆவணத்துடன் மதுபான கழகத்தில் அனுமதி பெற்றதும் பார் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னை  புறநகர்களிலும் சேர்த்து 1200 மதுபான கடைகள் உள்ளன. எனவே, மீதமுள்ள சுமார் 350 பார்களுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிகிறது. அதன் பிறகு அந்த பார்களுக்கு டெண்டர் விடப்பட இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்புகளில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதில் கவனம் செலுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்… https://patrikai.com/tn-govt-focus-on-auctioning-tasmac-bars-not-focusing-on-flood-impacts-dr-ramadoss-condemned/