நாளை மறுதினம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளும் தங்களது மூத்த தலைவர்கள் இல்லாமல் முதன்முறையாக களம் காணுகின்றன.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தின் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதுமான பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் ‘ஸ்டாலின் செய்வாரா’ என்ற முன்னணி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் ஸ்டாலின்.

அப்போது ஸ்டாலினிடம் சினிமா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தரமான படங்களை நிச்சயம் பார்ப்பேன். ஸ்டைல் நடிகர் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். இளைஞர்களைக் கவரக் கூடிய வகையில் நடிப்பதால் விஜய்யை பிடிக்கும். நவரசம் கலந்த நடிப்பால் அஜித்தைப் பிடிக்கும்” என்றார்.