’பேட்ட’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த்

சென்னை

தாம் நடித்து வெளிவந்துள்ள ’பேட்ட’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

பொங்கலை ஒட்டி நேற்று ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் துவக்க நாள் அன்றே பல ரசிகர்களை கவர்ந்துள்ளது. மீண்டும் பழைய ரஜினிகாந்த் தற்போது வெளி வந்துள்ளா என விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா முதல் முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளனர்.

அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பி உள்ளார். அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்த், “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். வெளியாகி உள்ள ‘பேட்ட’ திரைப்படம் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளடு. எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம்

என்னிடம் மக்களை சந்தோஷப்படுத்துவதே நமது வேலை என கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு காட்சியிலும் கூறுவார். அவ்வாறு அவர் என்னை உசுப்பேற்றி நன்கு நடிக்க வைத்துள்ளார். ஆகவே இந்த பெருமை எல்லாம் கார்த்திக் சுப்புராஜையே சேரும்” என தந்து படத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'பேட்ட', karthik subburaj, people happy, Petta, Rajinikanth, கார்த்திக் சுப்புராஜ், மக்கள் மகிழ்ச்சி, ரஜினிகாந்த்
-=-