சென்னை

நேற்று முதல்வர் திறந்து வைத்த கருணாநிதி நினைவிடத்தை நடிகர் ரஜினிகாந்த் தாஜ்மகாலுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்

தமிழக சட்டசபையில் முதல்வர் ம் க ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி கலைஞர் நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்று இவற்றை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.  இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்,

“கருணாநிதி நினைவிடம் மிகவும் அருமையாகவும் மிகவும் அற்புதமாகவும் உள்ளது இதை. கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். இது அவ்வளவு அருமையாக உள்ளது”

என்று புகழ்ந்துள்ளார்.