திருச்சி:
ரஜினியை முன்னிலைப் படுத்தி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு பெருந்திரளாக ரஜினி ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் நடக்கும் இந்த மாநாட்டில் தற்போது தமிழருவி மணியன் பேசி வருகிறார்.
அப்போது அவர், “காந்திய மக்கள் இயக்கம் ரஜினிகாந்தை முதல்வராக்குவதற்கு ஏன் முடிவெடுத்தது என்பதைச் சொல்கிறேன்.
1967ல் விருதுநகரில் காமராஜர் தோற்கடிக்கப்பட்ட அன்று கண்ணீருடன் அவர் காலடியில் விழுந்து அரசியலில் சேர்ந்தவன் நான். இரு கட்சியை அரசியலில் இருந்து அப்புறப்டுத்த ஒவ்வொருவராகச் சொல்லிப் பார்த்தேன். நடக்கவில்லை. நான் பிடித்திருக்கும் கடைசி கல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த வாய்ப்பை தமிழகம் தவறவிட்டால் தமிழகம் தவிக்கும்’’ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‘‘ரஜினிகாந்த் அவர்கள் உயிருக்கு உயிரான ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர், சுருக்கமாக ஒரு விசயம் சொன்னார். திருக்குறள் ஒன்றே முக்கால் அடி. ரஜினி ஒரே அடியில் சொன்னார். சிஸ்டம் சரியில்லை. இது என் மனதில் இருந்தது. நெஞ்சுக்கு நெருக்கமாக வந்தார்.
ரசிகர்களிடம் ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும். என் பெயரைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்க நினைத்தால் விலகி விடுங்கள். இதுதான் ரசிகருக்கு சொல்லியிருக்கும் முக்கிய செய்தி. ரஜினி நல்ல ஆட்சியைத் தர தயாராகிவிட்டார் என்பதை இது உணர்த்துகிறது. நிச்சயம் நல்லது நடக்கும். தமிழக முதல்வராக ரஜினி அமர்வார்” என்று தமிழருவி மணியன் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசிவருகிறார்….