சென்னை,

மிழகத்தில் நிலவும்  பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு  ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று  தமிழகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுவில் பிரிந்திருந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதைத்தொடர்ந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து தழிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு அவசரமாக சென்னை திரும்புகிறார்.

அணிகள் இணைப்பு குறித்து திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது.

காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வமும் தனது அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

பகல் 12 மணியளவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக கட்சி அலுவலகத் திற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது

ஓபிஎஸ் – இபிஎஸ் சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வர உள்ளார்.