ராகவா லாரன்ஸ் ஒட்டுண்ணி!: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

Must read

பல்வேறு பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம். பிறகு ஒருவழியாக இப்போது வெளியாகியிருக்கிறது. இப்போடு இன்னொரு பிரச்சினை.


பட விளம்பரங்களில் லாரன்ஸை, “மக்கள் சூப்பர் ஸ்டார்” என்ற அடைமொழியுடன் குறிப்பிட்டிருக்கின்றனர். இதனால் ரஜினி ரசிகர்கள் ஆவேசமாகி விட்டார்கள்.
அவர்கள் சொல்வது இதுதான்:

“திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். அவரால்திரையுலகுக்கு வந்தவர்தான் இந்த ராகவா லாரன்ஸ். ரஜினி சிபாரிசு செய்ததால்தான் லாரன்ஸ், டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

பிறகு ரஜினி தன் எல்லா படங்களிலும் லாரன்சுக்கு வாய்ப்பு அளித்தார். இதனால் தன்னை ரஜினியின் தீவிர ரசிகனாகக் காட்டிக் கொள்ளும் லாரன்ஸ், தன் படங்களில் ரஜினி படம், பெயர், காட்சிகள் வரும்படி காட்சிகள் அமைத்தார். பிறகு ரஜினி படத் தலைப்புகளை தன் படங்களுக்குவைத்தார். இதனால் நாங்களும், தலைவரின் ரசிகர்தானே என்று ஆதரவு அளித்தோம். ரஜினி நற்பணி மன்ற விழாக்களுக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்து மரியாதை செலுத்தினோம்.

ஆனால் லாரன்ஸ் இப்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தன்னை மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார். இது எங்களை மிகவும் ஆத்திரப்படுத்தி விட்டது. தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான்

லாரன்ஸ் தான் ஒரு நன்றிகெட்ட மனிதன் என்பதை நிரூபித்துவிட்டார். இனி அவருக்கு எங்கள் ஆதரவு கிடையாது” என்று சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரம், தன்னை மக்கள் சூப்பர் ஸ்டார் எனறு விளம்பரங்களில் குறிப்பிட்டது பற்றி ஏதும் தெரியாது என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் ரஜினி ரசிகர்களின் கோபம் தணிந்த பாடில்லை.

More articles

Latest article