1982-ம் ஆண்டு எல்.வி.பிரசாத், 1996-ல் நடிகர் சிவாஜி கணேசன், 2010-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது அளிக்கப்பட்டது . இதையடுத்து இந்த விருது தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அறிக்கையில் :
“இந்திய திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டுக்கும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் கே.பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாகர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நண்பர் கமல், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எடப்பப்படி என கூறியிருப்பதை சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர் .
— Rajinikanth (@rajinikanth) April 1, 2021