சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொரொனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடி நாட்டு நடப்புகள் பற்றி அவ்வபோது கருத்து பகிர்ந்து வருகிறார். கொரோனா விழிப் புணர்வு குறும்படத்தில் நடித்தார். சாத்தான்குளம் தந்தை மகன் போலீஸார் அடித்து கொன்றது பற்றி கருத்து தெரிவித்து குற்றம் செய்த போலீஸாரை சத்தியமாய் விடக்கூடாது என்றார். இன்று கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசியவர்களை வன்மை யாக கண்டித்தார்.

இந்நிலையில் நேற்று லம்போக்னி உலக அதிவேக காரை முகத்தில் மாஸ்க் அணிந்து ஒட்டிச் சென்றார். இந்நிலை யில் ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகி வைராலாகி இருக்கிறது. சென்னையடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் உள்ள தோப்பில் ரஜினி வாக்கிங் செல்லும் படம் வெளியாகி இருக்கிறது.