சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு தனி விமானத்தில் பறக்கும் ரஜினி….!

Must read

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அமெரிக்காவில் வைத்து இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமெரிக்கா சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வருகிறார் ரஜினிகாந்த்.

தற்போது கொரோனா தொற்றால் இந்தியர்கள் அமெரிக்கா செல்ல அவ்வரசு தடை விதித்தது என பல காரணங்களால் ரஜினியின் அமெரிக்கப் பயணம் தள்ளிப் போனது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்டதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார் ரஜினி.

ஜூன் 20-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார் ரஜினி. இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டுதான் ரஜினி இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். அதற்குப் பிறகே ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

 

More articles

Latest article