‘ஐ யம் சோ ஹாப்பி’ எனச் சொன்ன வேத் தனுஷ்….!

Must read

அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (27.10.2021) படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேரனுடன் அண்ணாத்த படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளார். முதல் முறை தன் பேரனுடன் படம் பார்த்த அனுபவத்தைத் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

என்னுடைய முதல் இரண்டு பேரன்கள் யாத்ராவும், லிங்காவும் தனுஷுடன் கொடைக்கானலில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு படம் பார்த்தேன் என்று சொன்னால், அவ்வளவுதான் ரகளையாகிடும். அதனால், அவர்களிடம் சொல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். நானும், சௌந்தர்யா, ஐஸ்வர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்திகள் அனைவரும் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தோம். குறிப்பாக எனது பேரன் வேத் என் அருகில் அமர்ந்து படம் பார்த்தான், பின்பு என்னைக் கட்டிப்பிடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ‘ஐ யம் சோ ஹாப்பி’ எனச் சொன்னான் என கூறியுள்ளார் .

 

More articles

Latest article