இமயமலையில் ரஜினி: புதிய புகைப்படங்கள்

 

இமயமலையில் ரஜினி குதிரையில் உலா வரும் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன.

கடந்த சனிக்கிழமை அன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் புறப்பட்டார். அங்கே 15 நாள்கள் தங்க திட்டமிட்டிருக்கிறார்.  யாத்திரிகர்கள் தங்குவதற்காக, பாபா குகையின் அருகே அவரது நண்பர்களுடன் சேர்ந்து அவர் சத்திரம் ஒன்றை கட்டியிருக்கிறார்.   சில மாதங்களுக்கு முன் அதன் திறப்பு விழா நடைபெற்றபோது, ரஜினியால் கலந்து கொள்ள இயலவில்லை.

இந்நிலையில்தான் ரஜினி இப்போது அங்கு பயணம் சென்றுள்ளார்.

இதற்கிடையே  அவர் இமயமலையில் குதிரையில் பயணம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியாகி இருக்கின்றன.

Tags: Rajini in the Himalayas: new photos, இமயமலையில் ரஜினி: புதிய புகைப்படங்கள்